மத்திய அரசின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா’ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இடையேயான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வரலாற்று சிறப்புமிக்க ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகிறது. ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டைப் பயன்படுத்தி இஸ்ரோவின் அதிவேக தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ‘ஜிசாட்-20’ விண்ணில் ஏவ உள்ளது.

இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வரும் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் புறப்பட உள்ளது. இந்தியாவின் விண்வெளி முயற்சிகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. ஏனெனில், இது ஸ்பேஸ்எக்ஸின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி அதன் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை உலக அரங்கில் புதிய உயரத்திற்கு உயர்த்துகிறது.