ஆந்திராவில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு வழங்குவதாக அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றி விட்ட நிலையில் முதியோருக்கான ஓய்வூதியம் 2000 ரூபாயை படிப்படியாக 3000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 4 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதாக அவர் உறுதி அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வழங்குவதாகவும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் செய்து கொடுப்பதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.