இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது பிறந்தநாளுக்கு கேக் ஒன்றை வெட்டுகிறார். அப்போது அவரது அருகில் 2 பெண்கள் நிற்கின்றனர். அவர் கேக்கை வெட்டுவதற்கு முன்பாக தனது கையில் சிறிய பென்சில் வெடியை வெடிக்க வைக்கிறார்.

அதன் பின் அந்த இளைஞர் அந்த வெடியை அங்கும் இங்கும் அசைக்கிறார். அப்போது சுற்றி இருந்தவர்கள் அவர் மீது ஸ்னோ ஸ்ப்ரேயை அடிக்கின்றனர். அந்த இளைஞர் வெடியை அங்கும் இங்கும் அசைத்துக் கொண்டிருக்கும் போது, அவரது தலையிலிருந்த நுரையில் படுகிறது. இதையடுத்து உடனடியாக தீப்பற்றி எறிய தொடங்குகிறது.

இதில் அவரது முகம் முழுவதும் பற்றி எரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது தலையில் இருந்த தீயை அணைக்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.