
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் இந்தியாவின் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அமைந்துள்ளது. ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரையில் உள்ள பளிங்கு கற்களால் ஆன இந்த சுற்றுலா தளத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரிஸ்டா ஜாமன் என்ற பெண் தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பதற்காக வந்திருந்தார்.
அவர் தனிமையாக தாஜ்மஹாலை சுற்றி பார்க்க ஆசைப்பட்டதால், மக்கள் கூட்டம் இல்லாத நேரத்தில் அங்கு செல்ல எண்ணினார். அதன்படி அதிகாலை 4 அளவில் தாஜ்மஹாலுக்கு முதல் ஆளாக சென்றார். யாரும் இல்லாத நேரத்தில் தனிமையாக அங்கு தாஜ்மஹாலின் அழகை கண்டு களித்த அவர் அங்கு சுற்றித்திரிந்த மயில் பறவைகளை ரசித்த அவர், அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் இது தாஜ்மஹாலா…?அல்லது சொர்க்கமா…? தாஜ்மஹாலின் அழகை இந்த பெண் அழகாக வெளிப்படுத்தியுள்ளார் என்று பாராட்டி வருகிறார்கள்.