புது தில்லியில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆகஸ்ட் 14 இரவு நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒரு வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக பணியில் இருந்த ஜிஆர்பி காவலர் ஆஷிஷ் குப்தா, முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
51 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், காவலர் பயத்தில் கைகூப்பி மன்னிப்பு கேட்பதும், கண்ணீர் வடிப்பதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புகாரின் அடிப்படையில், ஜிஆர்பி எஸ்பி பிரசாந்த் வர்மா, காவலர் ஆஷிஷை உடனடியாக இடைநீக்கம் செய்து, விசாரணையை தொடங்கியுள்ளார்.
‘पैर पकड़ता हूं नौकरी चली जाएगी’ : ट्रेन में लड़की से छेड़छाड़ करते पकड़ा गया GRP सिपाही
दिल्ली से प्रयागराज जा रही ट्रेन में GRP सिपाही आशीष गुप्ता ने सीट पर सो रही लड़की से छेड़छाड़ की. पीड़िता ने घटना का वीडियो बना लिया, जिसमें सिपाही कान पकड़कर माफी मांगता नजर आया. मामले के… pic.twitter.com/VAWia5vzn6
— NDTV India (@ndtvindia) August 23, 2025
வீடியோவில், நள்ளிரவில் காவலர் ஆஷிஷ் குப்தா, பெண்ணின் இருக்கையருகே வந்து, அவரது உடலை தகாத முறையில் தொட்டு அழுத்தியதாக கூறப்படுகிறது. பெண் விழித்து அலறியதால், மற்ற பயணிகள் கவனம் ஈர்க்கப்பட்டது. இதனை அந்த பெண் தனது மொபைலில் பதிவு செய்து, காவலரை மிரட்டினார்.
வீடியோவில், ஆஷிஷ் தனது வேலையை காப்பாற்றுமாறு கெஞ்சுவதும், பயத்தில் மன்னிப்பு கேட்பதும் தெளிவாக தெரிகிறது. ஆனால், பெண்கள் அவரை கடுமையாக கண்டித்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஆன்லைனில் புகார் அளித்தார். இந்த சம்பவம் இணையத்தில் பெரும் கண்டனத்தை பெற்று, காவலரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என பயனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜிஆர்பி மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போது, வீடியோவின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், விசாரணைக்கு பிறகு ஆஷிஷ் இடைநீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எஸ்பி பிரசாந்த் வர்மா தெரிவித்தார்.
