தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் பழைய வீடியோக்கள் அடிக்கடி தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஸ்டேடியத்தில் நடிகர் விஜய் நடனமாடிய ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர தூதராக நடிகர் விஜய் இருந்தார். அப்போது ஒரு போட்டியின் போது நடிகர் விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியை போட்டுக் கொண்டு தன் மகனுடன் ஸ்டேடியத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சப்போர்ட் செய்யும் விதமாக ஸ்டேடியத்தில் விஜய் நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஒரு காலத்தில் தளபதி விஜய் எப்படி இருக்கிறார் பாருங்கள் என்று கூறி வருகிறார்கள்.

https://twitter.com/Bharani_Tweets_/status/1645818344069828609?t=k3A1epK8Kg32RCl0JllVcw&s=19