தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தற்போது குணசேகரன் இயக்கத்தில் சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா சாகுந்தலம் படப்பிடிப்பு குறித்து ரசிகர்களுடன் உரையாடும்போது கூறியுள்ளார். இது குறித்து சமந்தா கூறியதாவது, எனக்கு மலர்கள் என்றால் மிகவும் அலர்ஜி. படப்பிடிப்பின் போது கை மற்றும் கழுத்தில் அடிக்கடி மலர்மாலைகளை போட்டுக் கொண்டதால் உடம்பில் அலர்ஜி ஏற்பட்டு தழும்புகள் வந்தது. இந்த தழும்புகள் 6 மாதங்கள் வரை என் உடம்பில் மச்சங்கள் போல இருந்தது.

நான் படப்பிடிப்பின் போது என் உடம்பில் உள்ள தழும்புகள் தெரியாமல் இருப்பதற்காக மேக்கப் போட்டுக் கொண்டேன். சாகுந்தலம் படத்திற்காக தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நானே டப்பிங் பேசியுள்ளேன். அது மிகவும் கஷ்டமான வேலை தான். இருப்பினும் படத்திற்கு ஒரிஜினல் வாய்ஸ் தேவை என்பதால் நானே சுயமாக டப்பிங் பேசியுள்ளேன். சூட்டிங் சமயத்தில் என்னை ஒரு முயல் கடித்து விட்டது. அங்கு நிறைய முயல்கள் இருந்தது. அதில் ஒரு முயல் மட்டும் என் கையில் கடித்து விட்டது. இதனால் எனக்கு முன்பு பிடித்த முயல்கள் என்னை கடித்ததில் இருந்து  பிடிக்காமல் போய்விட்டது என்று கூறினார். மேலும் சாகுந்தலம் திரைப்படம் நாளை அதாவது ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.