ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாலையில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 3 பெண்கள் தங்களது வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் குறுகிய பாதையில் செல்லும்போது வாலிபருக்கும், அந்த பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் தகராறாக மாறிய நிலையில், அந்த இளைஞர் பெண்களை அடித்ததார். இதனால் பதிலுக்கு அந்த பெண்களும் வாலிபரை தாக்கினர். அப்போது ஆத்திரமடைந்த இளைஞர் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் 3 பெண்களையும் சுட்டார். இதில் அந்த 3 பெண்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக காவல்துறையினர் வந்து அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் 3 பெண்களும் பரிதாபமாக இறந்துவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர் . மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.