வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. இதுகுறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த வகையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடமும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, அவருடைய கட்சி என்றால் அவர் தானே வேட்பாளராக இருப்பார். அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்கள் மும்முனை போட்டி என்று.

ஏனென்றால் எங்களுடைய கொள்கைக்கும், அவர்களுடைய கொள்கைக்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளதா?. நாங்கள் நாட்டைப் பற்றி சிந்திப்போம். எங்களுக்கு அவர்களுடைய கொள்கைக்கும் 1000 கிலோமீட்டர் தூரம் இருக்கு. எனவே அவங்க 3 பேருக்கும் போட்டி எங்களுக்கு எப்பொழுதும் போட்டியே கிடையாது. உலக தமிழக வரலாற்றில் 4 முறை தோல்வி அடைந்தும் துவளாமல் 5-வது முறை போட்டியிடுவது நாங்கள் தான் என்று சீமான் கூறினார்.