இலங்கைக்குத் தனியாகச் சுற்றுலா வந்த ஒரு வெளிநாட்டுப் பெண்மணிக்கு இலங்கை நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர், அந்தப் பெண்ணைத் தொடர்ந்து பின் தொடர்ந்ததோடு, பாலுறவுக்கான கோரிக்கைகளை வைத்துள்ளார். பெண் சுற்றுலாப் பயணி மறுப்புத் தெரிவித்த பின்பும், அந்த நபர் தன் செயலை நிறுத்தவில்லை.
View this post on Instagram
அந்த நபர், பெண்மணியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல், பொது இடத்திலேயே தனது ஆபாச உறுப்புகளைக் காட்டி, தவறான முறையில் நடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இந்தச் சம்பவம் முழுவதையும் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தார். பாலியல் அத்துமீறல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், மற்றப் பயணிகள் ஆபத்துகளை அறியவும் அவர் இந்த வீடியோவைப் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, இலங்கையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. குற்றவாளி மீது உடனடியாகக் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
