
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது..
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அகமதாபாத் மோடி மைதானத்தில் மோதுகின்றன. மார்ச் 31ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் மே 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் மே 28ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் நடைபெற வேண்டிய அந்த அட்டவணையானது தற்போது வெளியாகி உள்ளது. இதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. ஐபிஎல் போட்டிகள் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 12 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது.. இந்த தொடருக்கான அனைத்து போட்டிகளுக்குமான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
#IPL2023 Full Schedule pic.twitter.com/z2oeSeDSTI
— Ayyappan (@Ayyappan_1504) February 17, 2023