2023 ஐபிஎல் தொடரில் இன்று சனிக்கிழமை 2 லீக் போட்டிகள் நடைபெறுகிறது..

ஐபிஎல் 2023ல் 2 போட்டிகள் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 8) நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் 3:30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகிறது. இரண்டாவது போட்டியில் 07:30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. மும்பை – சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

வான்கடே விக்கெட் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக இருக்கும். உள்நாட்டு போட்டியாக இருந்தாலும் சரி, ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, சர்வதேச போட்டியாக இருந்தாலும் சரி, இங்கு ரன் மழை பொழிகிறது. இன்று நடக்கும் ஆட்டத்தில் இங்கே நிறைய பவுண்டரிகளும் சிக்ஸர்களும் இருக்கலாம்.

வான்கடேயில் நடைபெற்ற 8 டி20 சர்வதேசப் போட்டிகளில், 9 முறை 180+ ஸ்கோர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 4 முறை ரன்கள் 200ஐ கடந்துள்ளது. இங்கு சர்வதேச டி20யின் அதிகபட்ச ஸ்கோர் 240/3.. ஐபிஎல் போட்டியிலும் இதே கதைதான். இங்குள்ள பிளாட் விக்கெட்டில் பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பு உதவி எதுவும் கிடைப்பதில்லை. இங்குள்ள எல்லைகள் குறுகியதாகவும், அவுட்ஃபீல்ட் மிக வேகமாகவும் இருக்கும்.

வான்கடே ஆடுகளத்தில் டாஸ் கூட முக்கிய பங்கு வகிக்கும். இங்கு டாஸ் வென்ற அணி முதலில் பந்து வீச விரும்புகிறது. இங்கு நடைபெற்ற 8 டி20 சர்வதேச போட்டிகளில் சேசிங் அணி 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டியிலும் இதே போக்கு உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் சராசரி காரணமாக பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களால், இங்கு அணிகள் முதல் இன்னிங்ஸில் பந்துவீச விரும்புகின்றன.

CSK vs MI ஹெட் டு ஹெட் ரெக்கார்ட் :

ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் அதிக வெற்றி பெற்ற அணிகள். இதுவரை நடந்த 15 ஐபிஎல் பட்டங்களில் 9 பட்டங்களை இவ்விரு அணிகளும் வென்றுள்ளன. இதில் மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையும் கோப்பையை வென்றுள்ளது.. இத்தகைய சூழ்நிலையில், இந்த பழம்பெரும் அணிகளின் போட்டி ஒவ்வொரு முறையும் சுவாரஸ்யமாக உள்ளது.

ஐபிஎல்-ல் இந்த இரு அணிகளின் தலையாய புள்ளி விவரங்களைப் பார்த்தால், மும்பை இந்தியன்ஸ் அணி சற்று முன்னேறி இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இதுவரை 36 ஆட்டங்கள் நடந்துள்ளன, இதில் 15ல் சிஎஸ்கேயும், 21 ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. எனவே நாளைய போட்டி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

இதனிடையே   வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் அதிகளவில் கூடுவதால், மைதானமே மஞ்சள் நிறமாக மாறும், அதனால் மும்பை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், Mi FAN Zone என்ற 2 கேலரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கேலரிக்குள் சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எம்ஐ ஃபேன் சோனை திறக்கும் அளவிற்கு வந்து விட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த முறை இரு அணிகளும் மும்பையில் விளையாடியபோது, ​​சிஎஸ்கே கூட்டம் அதிகமாக இருந்தது. மைதானம் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணி தனது முதல் 2 லீக் போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் முதல் வெற்றியை பெற போராடும் என்பதால்  ஆட்டத்தில் அனல்பறக்கும்.. அதே நேரம் ராஜஸ்தான் அணியும் 2வது வெற்றியை வசப்படுத்த மல்லுகட்டும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.. மொத்தத்தில் இன்று நடக்கும் 2 போட்டிகளுமே ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கப் போகிறது. கடந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது ஜோஸ் பட்லருக்கு விரலில் காயம் ஏற்பட்ட காரணத்தால் இன்றைய போட்டியில் ஆடாதது டெல்லி அணிக்கு நிம்மதி அளிக்கும்..

RR vs DC சாத்தியமான விளையாடும் XIகள்

ராஜஸ்தான் ராயல்ஸ்  : 

யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (Wk/கே), துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஓபேட் மெக்காய், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல்.

டெல்லி  கேபிடல்ஸ் :

பிருத்வி ஷா, டேவிட் வார்னர் (கே ), மிட்செல் மார்ஷ், ரோவ்மேன் பவல், சர்பராஸ் கான், அக்சர் படேல், அபிஷேக் போரல் (வி.கே), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்

MI vs CSK  சாத்தியமான விளையாடும் XIகள் : 

மும்பை இந்தியன்ஸ்  :

ரோஹித் சர்மா(கே), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், எச் ஷோக்கீன், என் வதேரா, கேமரூன் கிரீன், பியூஷ் சாவ்லா, அர்ஷத் கான், இஷான் கிஷன்(வி.கீ), ஜோஃப்ரா ஆர்ச்சர்..

சென்னை சூப்பர் கிங்ஸ் :

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அம்பத்தி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மிட்செல் சான்ட்னர், எம்எஸ் தோனி(கே), தீபக் சாஹர், ஆர்எஸ் ஹங்கர்கேகர்.