இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டி 20 ஓவர்களை கொண்ட பரபரப்பான கிரிக்கெட் போட்டியாக பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அதிகம் விரும்பி பார்ப்போம் ஐ பி எல் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் பிசிசிஐ மூலமாக நடத்தப்பட்டு வருகின்றது. 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 17வது சீசன் ஆகும். அதில் மொத்தம் பத்து அணிகள் கலந்து கொள்ள உள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறும் என கூறப்படுகிறது.

மொத்தம் 74 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அணியின் உரிமையாளர்கள் தங்களுடைய அணிகளுக்கான வீரர்களை ஏலத்தின் மூலமாக தேர்வு செய்வார்கள். அதனுடைய 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை பார்வையாளர்கள் அனைவரும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தின் மூலம் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.