
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் பிளே ஆப் சுற்றுக்கான விதிகளில் பிசிசிஐ சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு இந்த வருடம் முதல் 2 மணி நேரம் வரை கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டிக்கும் இந்த விதி பொருந்தும் என தெரிவித்துள்ளது.
அந்த இரண்டு மணி நேரம் கூடுதல் கால அவகாசத்திலும் போட்டியை முடிக்க முடியவில்லை என்றால் ரிசவ் நாளான மறுநாள் போட்டியை நடத்தலாம். ஒவ்வொரு பிளே ஆப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டினாள் மற்றும் ரிசர்வ் நாள் என்று இரண்டு நாட்களிலும் மழையால் போட்டியை நடத்தி முடிக்க முடியவில்லை என்றால் புள்ளி பட்டியலில் முதலில் இருக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.