10 அணிகள் மோதும் 16வது ஐபிஎல் தொடர் இன்று இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இன்று குஜராத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ள நிலையில் இந்த போட்டியில் தோனி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

அப்படி தோனி விளையாடாத பட்சத்தில் ருத்துராஜ் அல்லது ஜடேஜா கேப்டனாக செயல்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த தகவல் தோனி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.