
சேலம் மாவட்டத்தில் உள்ள அய்யம்பெருமாம் பட்டி பகுதியில் சந்துரு (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜீவா என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக facebook மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 1/2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் instagram மூலம் சந்துரு பல பெண்களிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை அவருடைய மனைவி ஜீவா கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த 4-ம் தேதியும் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமடைந்த ஜீவா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பெயரில் சூரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.