இந்திய அணியின் முகமது சிராஜ்  ஒரே ஓவரில் 4 விக்கெட் எடுத்து அசத்திய நிலையில், தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது இலங்கை அணி..

2023 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில்  இந்தியா – இலங்கை அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் இன்று அக்சர் படேலுக்கு பதிலாக தமிழக வீரர் சுந்தர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடுவதாக தெரிவித்தது.

அதன்படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குஷால் பெரேரா இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். பும்ரா வீசிய  முதல் ஓவரின் 3வது பந்தில் குஷால் பெரேரா (0) கே.எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதைத்தொடர்ந்து முகமது சிராஜ் வீசிய 4வது ஓவரில் இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 4வது ஓவரின் முதல் பந்தில் பதும் நிசாங்கா(2) ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின் 3வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் சமரவிக்ரம மற்றும் 4வது பந்தில் அசலங்கா இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து அடுத்தடுத்து இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். தொடர்ந்து அந்த ஓவரின் கடைசி பந்திலும் தனஞ்செய டி சில்வா 4 ரன்னில் வெளியேறினார். இதனால் இலங்கை அணி 4 ஓவரில் 12 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து தடுமாறியது. சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட் எடுத்து அசத்தினார். பின் சிராஜ் மீண்டும் 6வது ஓவரில் இலங்கை கேப்டன் ஷன்காவை (0) போல்ட் ஆக்கி பெவிலியனுக்கு அனுப்பினார். தற்போது இலங்கை அணி 8 ஓவரில் 18 ரன்களுடன் ஆடி வருகிறது. வெல்லலாகே மற்றும் குஷால் மெண்டிஸ் இருவரும் ஆடி வருகின்றனர். இலங்கை அணியில் 4 பேர் டக் அவுட் ஆகியுள்ளனர். சிராஜ் மொத்தம் இதுவரையில் 5 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.

டீம் இந்தியாவின் சாத்தியமான விளையாடும் லெவன் :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சாத்தியமான ஆடும் லெவன் :

தசுன் ஷானகா (கே), பதும் நிசாங்கா, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (வி.கீ), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லலகே, ஹேமந்தா, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரனா.