ஆசிய கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

2023 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மாலை 3 மணிக்கு இந்தியா – இலங்கை இடையே நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடுவதாக தெரிவித்துள்ளது. அதன்படி அந்த அணி பேட்டிங் ஆடவுள்ளது. 8வது முறையாக ஆசிய சாம்பியனாகும் முனைப்புடன் ரோஹித் படை களம் இறங்கவுள்ளது. அதேநேரம், தசுன் ஷானகாவின் தலைமையின் கீழ் உள்ள இலங்கை அணி 7வது முறையாக பட்டத்தை வெல்ல முயற்சிக்கும்.

இறுதிப்போட்டியில் மழை பெய்தால் என்ன ஆகும்?

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இறுதிப் போட்டியின் நாளில் மழை பெய்ய 80 சதவீத வாய்ப்பு உள்ளது. அதாவது, சூப்பர்-4 சுற்று போல டைட்டில் போட்டியிலும் மழை வந்து கொண்டே இருக்க வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி மழையால் முடிவடையவில்லை என்றால், திங்கள்கிழமையும் (செப்டம்பர் 18) போட்டியை முடிக்க முடியும்.

இதனிடையே பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது வலது தொடை தசை காரணமாக கஷ்டப்பட்ட மகீஷ் தீக்ஷனா இறுதிப் போட்டிக்கு வரமாட்டார். ஸ்கேன் செய்து தசையில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தீக்ஷனாவுக்கு பதிலாக சஹான் ஆராச்சிகே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல இந்திய அணியில் அக்சர் படேல் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது காயமடைந்தார். அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் நேற்று சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அக்சர் படேலுக்கு பதிலாக தமிழக வீரர் சுந்தர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டீம் இந்தியாவின் சாத்தியமான விளையாடும் லெவன் :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சாத்தியமான ஆடும் லெவன் :

தசுன் ஷானகா (கே), பதும் நிசாங்கா, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (வி.கீ), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லலகே, ஹேமந்தா, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரனா.