2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  பங்கேற்றுள்ளது. இதில் ஹைதராபாத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் மதியம் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்துள்ளார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட தயாராக இருக்கிறது.. முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அதே வீரர்கள் மாறாமல் 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறார்கள்.

இந்திய அணி ஆடும் லெவன் :

ரோஹித் சர்மா (கே), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (வி.கீ ), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

நியூசிலாந்து அணி ஆடும் லெவன் :

டாம் லாதம் (கே )(வி.கீ ), ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர்.