உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை கண்டு களிக்க தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு மோதுகிறது இந்த போட்டியை எதிர்நோக்கி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் காத்து கிடைக்கின்றனர் மூன்றாவது முறையாக ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது அகமதாபாத் மைதானத்தில் கூட்டம் நிரம்பி வழியும். இந்த போட்டியை பார்க்க பிரதமர் மோடி உட்பட பிரபலங்கள் பலரும் அகமதாபாத்திற்கு வருகை தர உள்ளனர்.

மேலும் மைதானத்திற்கு சென்று பார்க்க முடியாத ரசிகர்களுக்கு ஏற்றவாறு இந்தியாவின் பல்வேறு முக்கிய இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு, அதில் போட்டியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்திலும் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் முக்கிய இடங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மைதானத்திற்கு சென்று பார்க்க முடியாத ரசிகர்கள் இந்த மெகா போட்டியை தொலைக்காட்சி மற்றும் மொபைல்களில் பார்த்து மகிழ தயாராக உள்ளனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை கண்டு களிக்க தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது. டான்ஜெட்கோ எக்ஸ் பக்கத்தில், இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து TANGEDCO-வின் தடையில்லா மின்சாரத்துடன் ICC உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 ஐ கண்டு மகிழுங்கள். உங்கள் வீடுகளில் மின்சாரம் தடையின்றி ஒளிவதற்கு நாங்கள் அயராது உழைக்கிறோம். நமது வெற்றியை இணைந்து கொண்டாடுவோம்” என தெரிவித்துள்ளது.