சர்வதேச அளவில் இந்தியர்கள் பலர் மிகப்பெரிய நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருப்பது இந்தியாவிற்கு பெருமை தரும் விஷயமாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனங்களை தொடர்ந்து இப்போது youtube நிறுவனத்திலும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக யூடியூப் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சூசன் தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனால் அடுத்த சிஇஓ அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் பதவியேற்க உள்ளார். 49 வயதாகும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் ஒரு மென் பொறியாளர் ஆவார். இவர் பொறியல் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றவர். கடந்த 2008 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இவரது பிரதான வேலையாக யூடியூப் ஷாட் மற்றும் யூ டியூப் மியூசிக் போன்றவற்றை உருவாக்க மற்றும் மேற்பார்வை இருந்தது.

ஏற்கனவே இந்திய வம்சாவளியை சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுளின் தலைமை அதிகாரியாகவும் சத்யா நாடல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் சாந்தனு நாராயணன் அடோப் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் உள்ளார்கள். இந்த வரிசையில் தற்போது நீல் மோகனும் இடம் பிடித்துள்ளார். இதன் காரணமாக இணையதளத்தில் இந்தியர்கள் மத்தியில் அதிகம் தேடப்படும் நபராக மாறியுள்ளார். இவர் youtube போன்ற மிகப் பெரிய நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பை ஏற்பது இந்திய நாட்டிற்கு பெருமை என்று பலரும் இணையத்தில் மகிழ்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.