
ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சைதன்யாபுரத்தில் கொய்யாடா ரவிதேஜா(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மேற்படிப்பிற்காக கடந்த 2022ம் ஆண்டு வாஷிங்டன் சென்றுள்ளார். அங்கு அவர் படிப்பை முடித்துவிட்டு தனது வேலைக்காக காத்திருந்தார். இந்த நிலையில் அவர் மர்மமான முறையில், உடலில் குண்டு காயங்களுடன் உயிரிழந்து உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவரை யாரேனும் சுட்டுக்கொன்று இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எதற்காக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற விவரம் தெரியாத நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படும் சம்பவம் வெளிநாட்டுகளுக்கு சென்று பள்ளி கல்வி படிக்கலாம் என்று நினைக்கும் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றவர்களும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாட்டில் தங்கி படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று அங்குள்ள காங்கிரஸ் ஆதரவு பெற்ற இந்திய தேசிய மாணவர் சங்கம் கூறியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஏன் அமைதியாக இருக்கிறது, வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.