சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் எல்லைகளைக் கடந்து வெளிநாட்டினரையும் ஈர்த்து வருவதை பறைசாற்றுகிறது. அந்த வீடியோவில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் புதிதாக வாங்கிய ஸ்கூட்டருக்கு இந்திய முறைப்படி வாகன பூஜை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
We do Pooja of new vehicle to invoke divine protection for the vehicle and its occupants
A Mexicans lady following our
Hindu ritual of Vaahan Pooja ☺️👇🏽 pic.twitter.com/QQSnbojZAl— Sheetal Chopra 🇮🇳 (@SheetalPronamo) January 9, 2026
அந்த வெளிநாட்டுப் பெண்மணி புதிய வாகனத்தின் மீது மலர்களைத் தூவி, அகர்பத்தி ஏற்றி வைத்து மிகுந்த பக்தியுடன் பூஜையில் பங்கேற்பது பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் வேத மந்திரங்கள் முழங்க, ஒரு புரோகிதர் அந்தப் பெண்ணிற்கு முறைப்படி பூஜை செய்து வைக்கிறார்.
இந்தியக் குடும்பங்களில் புதிய வாகனம் வாங்கும்போது செய்யப்படும் அனைத்து சடங்குகளையும் அந்த மெக்சிகோ பெண் மிகத் துல்லியமாகவும் ஈடுபாட்டுடனும் செய்வதைக் கண்டு இணையவாசிகள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். நமது நாட்டின் பண்பாடு உலகளவில் மதிப்பைப் பெற்று வருவதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனப் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
