
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள காஷ்மீரின் லே முதல் குஜராத் மாநிலம் சர்கிரீக் வரை அமைந்துள்ள 36 நகரங்கள் மீது ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
அதோடு சிறிய ரக பீரங்கிகள் மூலம் காஷ்மீரின் பூஞ்ச், உரி, குப்வாரா போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்திய போது இந்தியா தரமான பதிலடி கொடுத்தது. இந்நிலையில், இந்தியாவின் வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் f16 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாகிஸ்தானின் தொடர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.