பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸ் கிளப் த்ரோ இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் தரம்பிர் மற்றும் ப்ரனவ் சூர்மா ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வென்றதுடன், கிளப் த்ரோவில் அதிக தூரம் வீசிய ஆசிய சாதனையையும் படைத்துள்ளார். இது இந்தியாவிற்கு கிளப் த்ரோவில் கிடைத்த முதல் தங்கப் பதக்கமாகும். அதேபோல், ப்ரனவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிளப் த்ரோ பிரிவில் முதல் இரண்டு இடங்களை இந்திய வீரர்கள் பிடித்தது இதுவே முதல் முறையாகும். இந்த சாதனை வெற்றி, இந்திய பாரா ஒலிம்பிக் அணியின் திறமையையும், அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்த சாதனையை கொண்டாடி வருகின்றனர்.