பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகள் மீது பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே வான்வழி தாக்குதல் நடந்து வருவதால் எல்லைப் பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய வான்வழி தாக்குதலை எதிர்கொள்ள இயலாத பாகிஸ்தான் நம் நாட்டு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக எல்லை பகுதிகளில் வன்முறை தாக்குதல் நடத்தி வருகிறது. பாக்கி இல்லாமல் பாகிஸ்தான் அழிக்கப்படலாம் என்றும், இந்தியாவின் பதிலடிக்கு பயந்து பாகிஸ்தான் பிரதமர் பதுங்கு குழியில் மறைந்திருக்கிறார் என்றும் பதிவிட்டிருந்தார்.

அதோடு அவர்கள் வான்வழி தாக்குதலாக ஏவுகணையை இந்திய எல்லை பகுதிக்கு அனுப்பிய போது, இந்திய ராணுவம் அதனை தரையில் வீழ்த்தியது. அந்த காட்சி இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஏவுகணையை காரி துப்பி தரையில் வீழ்த்தியது போல் இருந்தது. இருப்பினும், பாகிஸ்தானின் தொடர் தாக்குதலுக்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.