என் மண், என் மக்கள்  யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  இன்றைக்கு நம்மிடையே வஷிஷ்ட நதி இருக்கிறது ஐயா. உங்கள் ஊரில் இருக்கிறது. புண்ணிய நதி. சமீபத்தில் நம்முடைய மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்தியாவிலே  351 நதிகளை கணக்கிட்டார்கள்.  351 நதிகளிலே எந்த நதிகளிளே மாசு அதிகமாக இருக்கிறது. எந்த நதியிலே மாசு அதிகமாக இருக்கிறது என்று தெரியுமா?

இந்தியாவில் இருக்கக்கூடிய 351 நதிகளில் மாசு அதிகமாக…. நீரை பயன்படுத்த முடியாத முதல் நதியாக இருப்பது உங்கள் ஊரில் இருக்கக்கூடிய வசிஷ்ட நதி. இந்தியாவில் இருக்கக்கூடிய 351 நதியிலே மாசு அதிகமாக இருக்கக்கூடிய நதி நம்ம நதி. என்னம்மா  பொருளாதாரத்தை பற்றி பேசுகிறார்கள் ? என்னம்மா இவங்க வளர்ச்சியை பத்தி பேசுறாங்க ?

வசிஷ்டர் காலத்தில் இருந்து இருக்கக்கூடிய இந்த புண்ணிய நதியை  உங்களை காப்பாற்ற முடியவில்லை. அந்த நதியின் தண்ணீரை தூய்மையாக வைத்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவிலே மாசு அதிகம் படிந்து இருக்க கூடிய ஆத்தூரில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு வளர்ச்சியை பற்றி தெரியாது. இவர்களுக்கு ஆட்சியை பற்றி தெரியாது.

ஏழை மக்களின் நலனை பற்றி தெரியாது. இளைஞர்கள் முன்னேற்றத்தைப் பற்றி தெரியாது. அடுத்த கட்டம் தமிழகத்தை எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி தெரியாது? இவர்களுக்கு தெரிந்த மூன்று வார்த்தை குடும்பம், கொள்ளை, சாதி. இந்த மூன்றை வைத்து தான் இங்கு அரசியல் நடக்கிறது. ஜாதியை வைத்து பிரிவினை,  கொள்ளையடி,  குடும்ப அரசியல் நடக்கிறது. திமுகவின் மூன்று அஸ்திரங்கள் இது இது மட்டும்தானே தவிர,  வேறு ஒன்றும் இல்லை என பேசினார்.