இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவல் காலகட்டத்தில் 180 நாடுகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, கொரோனா பரவல் காலகட்டத்தின் போது உலகின் பல்வேறு நாடுகளில் மருந்து கட்டுப்பாடுகள் இருப்பதை இந்தியா உணர்ந்தது. இதன் காரணமாக மருந்து தட்டுப்பாடு உள்ள நாடுகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் போன்றவைகள் கிடைப்பதற்கு இந்தியா முடிந்த வரை உதவி செய்தது என்று கூறியுள்ளார்.