2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி இப்போது நாளை முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதைத் தொடர்ந்து டிசம்பரில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் டிசம்பர் 10ம் தேதி தொடங்கி ஜனவரி 7ம் தேதி வரை தொடரும். டி20 போட்டிகள் டிசம்பர் 10, 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்குப் பிறகு, டிசம்பர் 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெறும். முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் டிசம்பர் 26ம் தேதியும், 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 3ம் தேதியும் தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் :

1வது டி20- டிசம்பர் 10, டர்பன்

2வது டி20- 12 டிசம்பர், கெபேரா

3வது டி20- டிசம்பர் 14, ஜோகன்னஸ்பர்க்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் :

1வது ஒருநாள் போட்டி – டிசம்பர் 17, ஜோகன்னஸ்பர்க்

2வது ஒருநாள் போட்டி – 19 டிசம்பர், கெபேரா

3வதுஒருநாள் போட்டி – 21 டிசம்பர், பார்ல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் :

முதல் டெஸ்ட்- 26-30 டிசம்பர், செஞ்சுரியன்

2வது டெஸ்ட்-3-7 ஜனவரி, கேப்டவுன்