இந்தியா – அயர்லாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது..

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான சுற்றுப்பயணம் முடிவடைந்ததை தொடர்ந்து, பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துக்கு சென்றுள்ளது. காயம் காரணமாக 11 மாத இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா. அயர்லாந்துக்கு எதிராக தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. இளம் இந்திய அணியை வழிநடத்த பும்ரா தயாராக உள்ள நிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பைக்கு முன் 3 போட்டிகளை உடற்தகுதி தேர்வாக எடுப்பார்.

பும்ராவுடன், ருதுராஜ் கெய்க்வாட், ரின்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா உள்ளிட்ட ஐபிஎல் வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஏமாற்றமளிக்கும் சுற்றுப்பயணத்திற்குப் பின் அணியில் இடம் கேள்விக்குறியாகியுள்ள சஞ்சு சாம்சன் மீது அனைவரின் பார்வையும் இருக்கும். இந்தியா – அயர்லாந்து இடையேயான முதல் டி20 போட்டியை பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கும் விஷயம்.. போட்டி எப்போது?, எங்கே?.. விளையாடும் 11 ​​என்னவாக இருக்கும் என்று தான். அநேகமாக இந்தியா மற்றும் அயர்லாந்து அணியின் சாத்தியமான பிளேயிங் லெவன் இப்படி இருக்கலாம்..

இந்தியா vs அயர்லாந்து, முதல் டி20 போட்டி :

ஆகஸ்ட் 18 (வெள்ளிக்கிழமை)
இடம் : டப்ளின்
நேரம் : மாலை 7:30 (இந்திய நேரம்)

தொடரின் அட்டவணை :

இந்தியா மற்றும் அயர்லாந்து : ஆகஸ்ட் 18, வெள்ளி, இந்திய நேரம்
இந்தியா மற்றும் அயர்லாந்து : ஆகஸ்ட் 20, ஞாயிறு, இந்திய நேரம்
இந்தியா மற்றும் அயர்லாந்து : ஆகஸ்ட் 23, புதன், இந்திய நேரம்

போட்டியை எப்போது, ​​எங்கு பார்க்கலாம் :

இந்தியா – அயர்லாந்து தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். இந்தியா – அயர்லாந்து இடையேயான போட்டி ஜியோ சினிமா செயலியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அதே நேரத்தில், ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க்கில் இந்தியாவில் போட்டியின் நேரடி ஒளிபரப்பையும் நீங்கள் காண முடியும்.

இந்தியா (சாத்தியமான லெவன்) :

ஜஸ்பிரித் பும்ரா (கே),  ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.

அயர்லாந்து (சாத்தியமான லெவன்) :

பால் ஸ்டிர்லிங் (கே), ஆண்ட்ரூ பால்பிர்னி, மார்க் அடேர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டாக்ரெல், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், தியோ வான் வூர்காம், கிரேக் யங்.

15 பேர் கொண்ட அணி :

இந்திய டி20 அணி :

ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஜஷ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஷாபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான், பிரசீத் கிருஷ்ணா.

அயர்லாந்து டி20 அணி :

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, ராஸ் அடேர், ஹாரி டெக்டர், கரேத் டெலானி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், ஃபியோன் ஹேண்ட், லோர்கன் டக்கர் (WK), மார்க் அடேர், ஜோசுவா லிட்டில், பேரி மெக்கார்த்தி, தியோ வான் வோர்காம், பெஞ்சமின் ஒயிட், கிரேக் யங்.