
இந்தியா 2வது இன்னிங்சில் 10 விக்கெட்டுகளுடன் 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பும்ரா 6 விக்கெட்டும் மற்றும் ஜெய்ஸ்வால் இரட்டை சதமும் அடித்து ஜொலித்தனர்..
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின் 2-வது நாளில் இங்கிலாந்தை 253 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா, முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராலி 78 பந்துகளில் 76 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 47 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பும்ரா (6/45) தனது 10வது 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார், மேலும் தனது 34வது டெஸ்ட் போட்டியில் பும்ரா 150 விக்கெட் மைல்கல்லை கடந்தார், டெஸ்டில் பும்ரா 152 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இங்கிலாந்து இன்னிங்ஸின் முதுகெலும்பை உடைத்தார். குறிப்பாக இங்கிலாந்து வீரர் ஒல்லி போப்பை கிளீன் யார்கரால் ஸ்டெம்பை தெறிக்க விட்டு ஆட்டமிழக்க செய்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் குல்தீப் யாதவ் (3/71), அக்சர் படேல் (1/24) ஆகியோர் விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியாவை விட இங்கிலாந்து இன்னும் 143 ரன்கள் பின்தங்கியுள்ளது. முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம்வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார், 22 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இளம் இந்தியர் ஆனார். ஜெய்ஸ்வால் மொத்தம் 290 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 209 ரன்கள் எடுத்தார். மேலும் முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் 34 ரன்களும், ரஜத் படிதார் 32 ரன்களும் எடுத்தனர். இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் (3/47), ரெஹான் அகமது (3/65), சோயப் பஷீர் (3/138) ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 2வது நாளில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் களமிறங்கி ஆடியது. 2வது நாள் முடிவில் இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 15 ரன்களுடனும், ரோஹித் சர்மா 13 ரன்களுடனும் அவுட் ஆகாமல் கிரீஸில் உள்ளனர். இந்திய 5 ஓவரில் 28 ரன்களுடன் உள்ளது. இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது..
சுருக்கமான ஸ்கோர் :
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி : 112 ஓவர்களில் 396 ஆல் அவுட் (யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் ; ஜேம்ஸ் ஆண்டர்சன் 3/47, ரெஹான் அகமது 3/65, சோயப் பஷீர் 3/138).
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி : 55.5 ஓவரில் 253 ரன்களுக்கு ஆல் அவுட் (சாக் கிராலி 76 ரன்கள் ; ஜஸ்பிரித் பும்ரா 6/45).
அதிவேகமாக 150 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் :
ஆர் அஸ்வின் 29 ஆட்டங்களில்
ரவீந்திர ஜடேஜா 32 ஆட்டங்களில்
ஜஸ்பிரித் பும்ரா 34 ஆட்டங்களில்
அனில் கும்ப்ளே 34 ஆட்டங்களில்
எரப்பள்ளி பிரசன்னா 34 ஆட்டங்களில்
புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர்களான அனில் கும்ப்ளே மற்றும் எரபள்ளி பிரசன்னாவுடன் இணைத்து, இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது அதிவேக இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். ஆர் அஸ்வின், 29 போட்டிகளில் மைல்கல்லை எட்டியதன் மூலம், 150 டெஸ்ட் விக்கெட்டுகளை அதிவேகமாக கைப்பற்றிய இந்திய வீரராக உயர்ந்து நிற்கிறார், இது அவரது சிறப்பான திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.
மிக வேகமாக 150 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய வேகப்பந்து வீச்சாளர்கள் :
வக்கார் யூனிஸ் (பாகிஸ்தான்) – 27 போட்டிகள்
ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) – 34 போட்டிகள்
இம்ரான் கான் (பாகிஸ்தான்) – 37 போட்டிகள்
சோயப் அக்தர் (பாகிஸ்தான்) – 37 போட்டிகள்
BUMRAH IN GOD MODE 👑🔥pic.twitter.com/3SKlToQ7cJ
— Johns. (@CricCrazyJohns) February 3, 2024