இங்கிலாந்து, இந்தியா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 2 ரங்களிலும், கே எல் ராகுல் 14 ரான்களிலும் அவுட் ஆனார்கள். இதையடுத்து சாய் சுதர்சன், சுப்மன் கில் ஜோடி சேர்ந்தது. இந்திய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 72 ரன்கள் அடித்திருந்தபோது மழை வந்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு உணவு இடைவேளை விடப்பட்டது. சாய் சுதர்சன் 25 ரன்களுடனும், சுப்மண்கில் 15 ரன்கள் ரண்களுடனும் களத்தில் இருந்தனர்.
A moment of madness from Shubman Gill!
Gus Atkinson throws down the stumps with the India captain stranded.
🇮🇳 8️⃣3️⃣-3️⃣ pic.twitter.com/cYa1PUbPAI
— England Cricket (@englandcricket) July 31, 2025
பின்னர் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்குள் இறங்கினர். ஆட்டம் தொடங்கப்பட்ட சிறிது நேரத்தில் சுப்மன் கில் 21 ரன்களில் தேவையில்லாமல் ஓடி அவுட் ஆனார். அதாவது பவுலர் வீசியை 27 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட சுப்மன் கில் அதனை அடித்து விட்டு ரன் எடுக்க ஓடினார். ஆனால் மறுமுனையில் இருந்த சாய் சுதர்சன் வேண்டாம் என்றார். இதையடுத்து சுப்மன் கில் மீண்டும் கிரீசுக்குள் செல்ல ஓடினார். ஆனால் அதற்குள் பந்தை பிடித்த கஸ் அட்கின்சன் ஸ்டம்பை நோக்கி துல்லியமாக அடித்து சுப்மன் கில்லை அவுட் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
