சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சாதனை எப்படி இருக்கிறது?

 2023 ஐசிசி உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் தொடங்க உள்ளது. இதற்கிடையே இந்திய அணி இங்கிலாந்துடன் செப்டம்பர் 30-ம் தேதி கவுகாத்தியில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்திய அணியின்  இரண்டாவது பயிற்சி ஆட்டம் திருவனந்தபுரத்தில் அக்டோபர் 3ஆம் தேதி நெதர்லாந்துக்கு எதிராக உள்ளது. இதையடுத்து இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

ஆனால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டிகளின் புள்ளி விவரங்களைப் பார்த்தால், இந்திய ரசிகர்களின் இதயம் உடைந்துவிடுமோ என்னமோ தெரியவில்லை. ஏனென்றால்  ஆஸ்திரேலியா அணி சேப்பாக்கில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சேப்பாக்கத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு  இடையேயான போட்டிகளின் சாதனை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சென்னையில் IND vs AUS சாதனை எப்படி இருக்கிறது?

சென்னை சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி மட்டும் இதுவரை மொத்தம் 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 7 வெற்றி, 6ல் தோல்வி கண்டுள்ளது. ஒரு போட்டி முடிவில்லை. இது ஓரளவு பரவாயில்லை, ஆனால் ஆஸ்திரேலியா அணி இங்கு எதிரணிகளை அதிகமுறை வீழ்த்தியுள்ளது. ஆம் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடந்த போட்டிகளின் புள்ளி விவரத்தை பார்த்தால், ஆஸ்திரேலியா சேப்பாக்கத்தில், இதுவரை மொத்தம் 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஆஸ்திரேலியா 5 வெற்றியும், ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியும் அடைந்துள்ளது. ஆனால் இந்திய அணி 14ல் 6 முறை எதிரணிகளிடம் தோல்வியடைந்துள்ளது.

சேப்பாக்கத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மொத்தம் 3 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளது. அதில் ஒரு முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது. கடைசியாக 2023 மார்ச் 22 ல் சென்னை சேப்பாக்கத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதாவது சொந்த மண்ணில் கூட எதிரணி அணிக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்தியாவின் சாதனை சரியில்லை. ஆனால் தற்போது இந்திய அணி வலுவாக இருப்பதால் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 இரு அணிகளிலும் ஸ்பின்னர்களின் மேஜிக் எடுபடுமா?

2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணிக்கு சொந்த மண்ணில் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் சுழற்பந்து வீச்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியைப் பதிவு செய்து இந்திய அணி முன்னேறும் என்று அனைவரும் நம்புவார்கள். அங்கு, சுழற்பந்து துறையில் குல்தீப், ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின்  ஆகியோர் அசத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில், ஆஸ்திரேலியாவில் ஆடம் ஜம்பா,  மேக்ஸ்வெல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்டர்களை தொந்தரவு செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் சேப்பாக் மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம்..

இந்திய ஒருநாள் உலகக் கோப்பை 2023 அணி

ரோஹித் சர்மா (கே), ஹர்திக் பாண்டியா (து.கே), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஆர். அஷ்வின், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.

ஆஸ்திரேலிய ஒருநாள் உலகக் கோப்பை 2023 அணி :

பாட் கம்மின்ஸ் (கே), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், மார்னஸ் லாபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க்.