இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. 3வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. அதே சமயம், இந்தப் போட்டிக்கான இரு அணிகளும் விளையாடும் 11 பேரில் பெரிய மாற்றங்களைக் காணலாம். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, தொடக்க வீரர் சுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் விளையாடும் 11-ல் இடம்பெற மாட்டார்கள் என தெரிகிறது.  

இரு அணிகளிலும் என்ன மாற்றங்கள் சாத்தியம்?

அதே நேரத்தில், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் ஆடும் 11-க்கு திரும்புவது உறுதியாகியுள்ளது. இதற்கு முன்பு கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் மொஹாலி மற்றும் இந்தூர் ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியவில்லை. அதேபோல ஹர்திக் பாண்டியாவைத் தவிர, இந்திய அணியில் 3வது ஒருநாள் போட்டிக்கான 11 பேரில் சுப்மன் கில், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் களமிறங்களாம் என்று நம்பப்பட்டது, ஆனால் இந்த வீரர்கள் ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாது.

ஆம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் உட்பட 5 வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா நேற்று தெரிவித்தார். 3வது போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் ரோஹித் கூறுகையில், “எங்கள் சில வீரர்கள் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர், மேலும் சில வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக வீடு திரும்பியுள்ளனர், மேலும் அவர்கள் தேர்வுக்கு வரமாட்டார்கள்.” இது தவிர சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது எங்களிடம் 13 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஷமி, ஹர்திக் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக வீடு திரும்பியுள்ளனர். இந்த போட்டியில் அக்சர் படேல் இல்லை. சில வீரர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் அணியில் நிச்சயமற்ற நிலை உள்ளது, இந்த விஷயத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியாது” என தெரிவித்தார்.

இருப்பினும் இந்த போட்டியை வென்று வாஷ் அவுட் செய்ய இந்திய அணி முயற்சிக்கும். அதே நேரத்தில் தொடரை இழந்தாலும், வெற்றியுடன் முடிக்க ஆஸ்திரேலியா விரும்பும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அணியின் சாத்தியமான லெவன் :

ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

ஆஸ்திரேலிய அணியின் சாத்தியமான லெவன் :

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் (வி.கீ), கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா