ரவீந்திர ஜடேஜா சந்தேகத்திற்குரிய ஒன்றை தனது விரலில் வைப்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், உண்மை என்னவென்று தெரியவந்துள்ளது..
பார்டர்-கவாஸ்கர் டிராபி என்பது மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது மட்டுமல்ல. இது ஒரு மன விளையாட்டு மற்றும் இரு நாடுகளின் கிரிக்கெட் சமூகங்களுக்கிடையேயான வார்த்தைப் போராகும், ஆஸ்திரேலிய ஊடகங்கள் பெரும்பாலும் தங்கள் அணியின் பின்னால் அணிவகுத்து, எதிரணிக்கு (இந்தியா) அழுத்தம் கொடுக்கின்றன. அவர்கள் புகார் செய்வதற்கான எந்த வாய்ப்பையும் விரைவாகக் காட்டுகிறார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜா சந்தேகத்திற்குரிய ஒன்றை தனது விரலில் வைப்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியபோது இந்த போக்கு முழுவதுமாக வெளிப்பட்டது.
மேட்ச் ரெஃப்ரி மற்றும் ஆன்-பீல்ட் அம்பயர்கள் தவறான அல்லது நியாயமற்றதாக எதையும் தெரிவிக்கவில்லை என்ற உண்மை இருந்தபோதிலும், ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்த சம்பவத்தை விரைவாகப் பற்றின. முகமது சிராஜ் ஜடேஜாவுக்கு ஏதோ ஒன்றைக் கொடுப்பது போல் அந்த வீடியோவில் காட்டப்பட்டது, அவர் பந்துவீசுவதற்கு முன் அதை தனது ஆள்காட்டி விரலில் தடவினார். ஜடேஜா பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. ஜடேஜா விதியை மீறி ஏதோ செய்கிறார் என ஆஸ்திரேலிய ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் நிலைமை “சுவாரஸ்யமானது” என்று அழைத்தார், அதே நேரத்தில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அவர் சுழலும் விரலில் என்ன வைக்கிறார்? இதை ஒருபோதும் பார்த்ததில்லை என்று ட்விட் செய்தார்/
இந்நிலையில் ஐசிசி விளையாடும் நிபந்தனைகளின் கீழ் ரவீந்திர ஜடேஜா பயன்படுத்திய விரலுக்கு களிம்பு பயன்படுத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பேட்ஸ்மேன்கள் ஓவர்களுக்கு இடையில் கிரீம்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் ஜடேஜாவைப் போலவே பந்து வழுக்காமல் இருக்க பந்துவீச்சாளர்கள் சிரமங்கள் அசௌகரியத்தைத் தவிர்க்க கிரீம்களைப் பயன்படுத்தலாம்..
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி நேற்று 63.5 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸி அணியில் அதிகபட்சமாக லாபுசேன் 49 மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்கள் எடுத்தனர். ஹேண்ட்ஸ்கோம்ப் 31 மற்றும் அலெக்ஸ் கேரி 36 ரன்கள் எடுத்தனர். மேலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 22 ஓவர்களில் 8 மெய்டன் ஓவர்கள் வீசி 47 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாகவும், கேஎல் ராகுல் நிதானமாகவும் விளையாடினர். பின் ராகுல் 20 (71) ரன்னில் டாட் மர்பி சுழலில் அவுட் ஆனார். இருப்பினும் ரோஹித் சர்மா அரைசதம் கடந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. ரோஹித் சர்மா 56 ரன்களுடனும் , அஸ்வின் ரன் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்தியா 24 ஓவரில் 77/1 என இருந்தது. இந்நிலையில் இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது.
ரோகித் சர்மாவும், அஸ்வினும் ஜோடி சேர்ந்து இன்று ஆடிவந்த நிலையில், அஸ்வின் 23 ரன்னில் அவுட்டானார். அதனைத் தொடர்ந்து வந்த புஜாரா 7, விராட் கோலி 12, சூர்யகுமார் யாதவ் 8 என மிடில் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஆனாலும் மறுமனையில் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் தனி ஒருவராக சிறப்பாக ஆடி சதம் விளாசினார். ரோஹித் 171 பந்துகளில் 14 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 9வது சதத்தை ரோகித் சர்மா பூர்த்தி செய்தார்.
ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோரை கடந்து இந்தியா தற்போது முன்னிலையில் ஆடி வருகிறது. தற்போது ஜடேஜாவும் (34), ரோஹித் சர்மாவும் (118) ஆடி வருகின்றனர். இந்திய அணி80 ஓவரில் 5 விக்கெட் இழந்து 226 ரன்களுடன் ஆடி வருகிறது.. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டாட் மர்பி 4 விக்கெட்டுகளும், லியோன் ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளார்.
What is it he is putting on his spinning finger ? Never ever seen this … #INDvsAUS https://t.co/NBPCjFmq3w
— Michael Vaughan (@MichaelVaughan) February 9, 2023
https://twitter.com/iamsohail__1/status/1623937476556656641
Someone sent me this and asked me what is going on here with the ball management?? @Gampa_cricket @beastieboy07 @auscricketpod #INDvsAUS pic.twitter.com/sqhWtURhbr
— Menners 🎙 (@amenners) February 9, 2023