தமிழ்நாட்டில் சமீப காலமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள் முன்கூட்டியே வேலையை தொடங்கி வெப்ப அலையின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பாக பணியை முடித்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தண்ணீர் வசதி மற்றும் நிழற் கூடங்கள் போன்றவற்றை போதுமான அளவில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் வெப்ப அலையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். மேலும் திறந்தவெளியில் வேலை செய்யும் பொதுமக்கள் மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.