ஜார்கண்ட் மாநிலத்தில் பணியாற்றி வருபவர் டி.ஜி.பி அனுராஜ் குப்தா.இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் குற்றவியல் தடுப்பு பிரிவின் அதிகாரியாகவும் இருந்தார். ஆனால் அப்போது காங்கிரஸ் கூட்டணி கட்சியான மோர்ச்சா கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதேபோன்று 2016 ஆம் ஆண்டு நடந்த ராஜசபா தேர்தலின் போது குற்றவியல் ஏ.டி.ஜி.பியாக இருந்தார். அப்போதும் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக கூறி இவர் மீது மாநில அரசு விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் தற்போது 2024 -2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. எனவே தேர்தல் ஆணையம் டி.ஜி.பி அனுராக் குப்தாவை முன் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பணி நீக்கம் செய்ய உடனடியாக உத்தரவிட்டது. டி.ஜி.பி பொறுப்பை மூத்த அதிகாரிகளுக்கு வழங்க ஜார்கண்ட் அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்த அறிக்கையை உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது.