உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், திருமணமான கையோடு முதலிரவில் கணவரை ஏற்க மறுத்து மணப்பெண் செய்த ரகளையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆடல் பாடலுடன் கோலாகலமாக நடந்த திருமணத்திற்குப் பிறகு, மணமகன் வீட்டிற்குச் சென்ற அந்தப் பெண், தனது முதலிரவின் போது கணவருடன் இருக்க மறுத்துத் தகராறு செய்துள்ளார். உறவினர்கள் எவ்வளவு சமாதானம் செய்தும் அவர் கேட்காததால், ஆத்திரமடைந்த அவரது தாய் மகளை சரமாரியாகத் தாக்கும் 72 வினாடி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
सात फेरे लेकर ससुराल आई दुल्हन ने पति को किया रिजेक्ट। मामला सामने आते ही दुल्हन की माँ और अन्य लोगों ने उसे पीटा। मारपीट का वीडियो सोशल मीडिया पर वायरल हो गया, जबकि मायके वालों ने भी उसे अपने घर में रखने से इंकार कर दिया।#ViralVideo #WeddingDrama pic.twitter.com/L1DndkhWuK
— NBT Hindi News (@NavbharatTimes) February 27, 2026
“எனக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டமில்லை என்று முன்பே சொன்னேன், ஆனால் யாரும் கேட்கவில்லை” என்று அடி வாங்கிய பிறகும் அந்தப் பெண் உறுதியாகப் பேசியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இறுதியில், மணப்பெண் தனது முடிவில் பிடிவாதமாக இருந்ததால், இரு வீட்டாரும் பேசி சுமுகமாகப் பிரிந்து செல்ல முடிவெடுத்தனர். காவல் நிலையம் வரை சென்ற இந்தப் பஞ்சாயத்து, ஒருவழியாகப் போலீஸ் முன்னிலையிலேயே முறைப்படி உறவை முறித்துக்கொண்டு முடிவுக்கு வந்தது.
