
ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமிய பெருமக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து தவெக தலைவர் விஜய் புறப்பட்டார்.