மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் வசித்து வரும் 22 வயது திருமணமான பெண் மற்றும் அவரது 17 வயது தங்கை ஆகியோருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தச் சகோதரிகள் இருவரும் கோவிலுக்குச் சென்றுவிட்டு இரவு தாமதமாகத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களைச் சந்தித்த பெண்ணின் உறவினரும் (Cousin), அவரது நண்பரான அமான் கான் என்பவரும், “நேரம் ஆகிவிட்டது, நாங்கள் உங்களை வீட்டில் விடுகிறோம்” என்று கூறி பாதுகாப்பு கொடுப்பது போல உடன் வந்துள்ளனர்.
சகோதரிகளை வீட்டில் விட்ட பிறகு, “வெளியே இருட்டிவிட்டது, இன்று இரவு மட்டும் இங்கே தங்கிக்கொள்கிறோம்” என நம்ப வைத்து அங்கேயே சாப்பிட்டுவிட்டுத் தூங்கியுள்ளனர். ஆனால், நள்ளிரவில் அந்த நயவஞ்சகர்கள் இருவரும் சகோதரிகளை மரண மிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மறுநாள் காலையில், “எங்களுக்குத் திருமணம் செய்து கொள்ள ஆசை இருக்கிறது, ஊருக்குப் போகப் பணம் வேண்டும்” என்று ஆசை வார்த்தை கூறி, அந்தப் பெண்களிடம் இருந்த 40,000 ரூபாய் பணம் மற்றும் வெள்ளி கொலுசுகளைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.
