மக்களவைத் தேர்தலில் வேட்பாளர் தோற்றால் அந்த மாவட்ட செயலாளர் நீக்கப்படுவர் என  முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுகவின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில்  மாவட்ட அளவில் 234 தொகுதிகளுக்கு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டம், காணொளி காட்சி மூலமாக நடைபெற்றது. இன்று காலை 10:30 மணிக்கு இந்த கூட்டமானது துவங்கியது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக இந்த கூட்டம் நடைபெற்றது. இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசும்போது மாவட்ட செயலாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் யாராவது தோல்வியடைந்தால், அந்த தோல்விக்கு காரணமான மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவார்கள் என்று கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.

குறிப்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும்  என்றும்,  அதற்கான பொறுப்பாளர்கள் மற்றும் தேர்வையாளர்கள் பார்வையாளர்கள் நியமித்த நிலையில் அதற்கான பணிகளை யாரும் செய்து வேலை செய்யாமல்,   நாடாளுமன்ற தேர்தலில்  கூட்டணி கட்சி உட்பட யாராவது வேட்பாளர் தோல்வி அடைந்தால் அந்த மாவட்ட செயலாளர் மெது நடவடிக்கை எடுக்கப்படம் என்றும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.