இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவை வழங்கப்படுகிறது. ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியும் என்பது மட்டும் தான் பல வாடிக்கையாளர்களுக்கு தெரியும். ஆனால் ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு வசதியையும் பெற்றுக் கொள்ளலாம். ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டவுடன் அந்த வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடும் கிடைக்க தொடங்கும். வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் ஏடிஎம் கார்டுகளின் வகைகளுக்கு ஏற்ப காப்பீடு தொகை கிடைக்கும். அதன்படி சாதாரண மாஸ்டர் கார்டில் 50 ஆயிரம் காப்பீடும், கிளாசிக் ஏடிஎம் கார்டில் ரூ. 1,00,000 காப்பீடும், விசா கார்டில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரையும், பிளாட்டினம் கார்டில் 5 லட்சம் வரையும் காப்பீடு கிடைக்கும்.

அதன்பிறகு ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் 1 லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். ஒருவேளை விபத்தில் கை அல்லது கால்கள் போன்ற உடல் ஊனம் ஏற்பட்டால் 50,000 காப்பீடு கிடைக்கும். இந்த காப்பீடு தொகையை பெறுவதற்கு வங்கியில் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். அட்டைதாரரின் நாமினி வங்கியில் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். மேலும் இதைத் தொடர்ந்து வங்கியில் இருந்து உரிய காப்பீடு தொகை கிடைக்கும்.