
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கொரோனா என்ற நோய் தொற்று ஒன்று கண்டறியப்பட்டது. இதையடுத்து சில மாதங்களிலேயே உலகம் முழுவதும் பரவி ஊரடங்கு போடப்பட்டது. இதன் காரணமாக பல ஆயிரம் கணக்கான மக்கள்கள் உயிரிழந்தனர். இந்த கொரோனா நோய் தொற்றின் தாக்கம் உலக மக்களிடையே குறைந்தாலும், இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இந்நிலையில் சீனாவில் மீண்டும் ஒரு புதிய ஹெச்.எம்.பி.வி வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருவதால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட கொரோனாவை போலவே இருமல், காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட அறிகுறிகளை இந்த நோய் தொற்றும் கொண்டுள்ளது. இருமல், தும்பல், தொடுதல் உள்ளிட்டவை மூலம் எளிதில் இந்த புதிய வகை நோய் தொற்று பரவக்கூடும் என்றும், குழந்தைகள் மற்றும் முதியவர்களை எளிதில் தாக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை கூறியதாவது, தற்போது வரை அச்சப்படுத்தும் அளவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த வைரஸ் இந்தியாவில் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. மக்கள் முன்னே எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என்றும், இந்த வைரஸ் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. சளி, இருமல் இருந்தால் பிறரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர்கள் பரிந்துரைத்து மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.