பொதுவாக வீட்டின் பாதுகாப்புக்காக பூட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது வெறும் 30 வினாடிக்குள் பூட்டை எளிதாக திறக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு புதிய மோசடி முறையைப் பற்றி ஒரு நபர் விளக்குகிறார்.

அதாவது வீட்டின் வெளியே போடப்பட்டிருக்கும் பூட்டில் சிரஞ்சில் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும் பெட்ரோலை செலுத்துகிறார். அதன் பின் பூட்டின் மீது தீயை வைத்ததும் பூட்டு பற்றி எரிகிறது. அந்த தீ அணையும் வரை காத்திருந்தால் பூட்டில் உள்ளே உள்ள பிளாஸ்டிக் மெம்பிரேன் தகடு தகர்த்து விடும்.

 

View this post on Instagram

 

A post shared by Explore Vadodaran | 4k🎯 (@explore_vadodara_0506)

பிறகு அதனை எளிதாக திறக்கலாம் என விளக்கம் அளிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களையும் பெற்று வருகிறது.