
தனியார் பள்ளி இயக்குனர் பழனிச்சாமி தற்போது அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பள்ளிகளில் பயிலும் மாணவைகளிடம் பாலியல் துன்புறுத்தல் அல்லது தகாத முறையில் முறைகேடாக பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். முறைகேடாக நடக்கும் ஆசிரியர்களை உடனே பதவி நீக்கம் செய்யவும், அவர்களது சான்றிதழ்களை ரத்து செய்யவும் மற்றும் கட்டாய பணி ஓய்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சமீப காலங்களாக தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அதிகம் நடைபெறுவதால் இதனை தடுக்கும் விதமாக இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பணி புரியும் பணியாளர்கள் என அனைவருக்கும் இது குறித்த ஒழுங்கு நடவடிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. பள்ளி மாணவிகள் பாலில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டால் எவ்வாறு புகார் அளிக்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை விவரங்களையும் பள்ளி மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.