
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இன்னைக்கு என்னவோ இவங்கள நாங்க கட்டிப்போட்டு வச்சிருந்த மாதிரி… இவங்க இப்ப திடிர்னு ப்ரீஆயிட்டது மாதிரி, அதை செலிப்ரேட் பண்றது மாதிரி… அதான் What a nonsense என கேட்கிறேன். 2016இல் எங்க அக்கா ஜெயலலிதா மறைந்த பிறகு, கொண்டாடாமல் திமுகவை சூழ்நிலை மாற்றி வைத்தது பிஜேபி என்கிற நன்றியை மறந்துட வேண்டாம் எந்த ADMK லீடர்ஸ்சும்.
Dont Forget. பிஜேபி இல்லனா இன்னைக்கு இருக்குற அதிமுக கட்சியே கிடையாது. அந்த மாதிரியாக நீங்க நெல்லிக்காய் மூட்டையாக சிதறி…. நூறு தனியா….. ஏழு தனியா… பத்து தனியா… அந்த மாதிரி இருந்த பொழுது நெல்லிக்காய் மூட்டையை சிதறாமல் கட்டி காப்பாற்றி, இன்னைக்கு ஒரு கட்சியா கொண்டு வந்த பிறகு…. முனுசாமி போன்றவர்கள் ஏதோ சொல்றாங்களே என்று ஏதாவது செய்யறதா? இனிமே அத பத்தி கவலைப்பட வேண்டியவர்கள் அவர்கள்.
இந்த கொரோனா காலத்துல உசுர காப்பாத்துன… மஹாராசனுக்கு நன்றியோடு எத்தனை பேர் இருக்க போறாங்க தமிழ்நாட்டுல என பார்த்துருவோமே… எனவே எங்களுக்கு எந்த விதத்திலும் நஷ்டம் இருக்காது. அதனாலதான் நான் தெளிவாவே சொல்லி இருந்தேன். ADMK தலைமை அல்லது பாஜக தேசிய தலைமை கூப்பிட்டு, ராஜா இந்த மாதிரி கூட்டணியை நாம முடிச்சுக்குறோம் என சொன்னாங்கன்னா… அன்னைக்கு பேசி இருப்பேன். இருந்தாலும் நான் பேசாம இருந்ததுக்கு காரணம்… இன்னக்கி வரைக்கும்…. காத்திருந்த காரணமே….
நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
இ.பி.எஸ் அதை உடைத்தாண்டி அந்த மாதிரி இருக்கு. எங்களுக்கு எந்த பகுதியில் கொஞ்சம் செல்வாக்கு கம்மின்னு நினைச்சோமோ… அந்த பகுதியில் கூட நடந்தோம். ராமநாதபுரம், சிவகங்கையில் யாத்திரையில் அண்ணாமலை அவர்களோடு நடந்தேன். கொஞ்சம் இடையில உடம்பு முடியல. மூச்சு திணறல் இருந்தது. இன்னைக்கு நல்லபடியாஇருக்கேன் . எதிர் காலத்துல பயணம் நல்லபடியா செய்ய முடியும் என தெரிவித்தார்.