பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கான். இவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நடிகராகவும் விளங்குகிறார். இவரது மனைவி கௌரி கான். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.1992இல் தீவானா என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, நான் உயிரிழந்தால் அது படப் பிடிப்பு தளத்திலேயே நடக்க வேண்டும் அதுதான் என்னுடைய வாழ்நாள் ஆசை. என கூறினார். இருந்தாலும் மனைவி கௌரி கான் மீது இவையெல்லாம் விட ஒரு படி மேலே அன்பு என சொல்லலாம் என நெகிழ்ச்சியுடன் கூறினார். இவர் ஏற்கனவே ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் சினிமாவா?, கௌரியா? என கேட்டால் கௌரிக்காக சினிமாவை விட்டே விலகுவேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.