
நடிகர் விஷால் நடிப்பில் “மதகஜராஜா” படம் பொங்கலுக்கு வெளியாவதாக படக்குழு தெரிவித்துள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நடிகர் விஷால் பங்கேற்றார். அப்போது மேடையில் நடிகர் விஷால் பேசியபோது அவரது கைகள் நடுங்கின. மைக்கை பிடிக்க முடியாமல் தடுமாறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
விஷாலுக்கு என்ன தான் ஆச்சு? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக வீட்டில் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருப்பதாகவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நடிகர் ஜெயம் ரவி விஷால் உடல்நலம் குறித்து உணர்ச்சிவசத்தில் பேசியுள்ளார். இதில் அவர் கூறியதாவது,”விஷாலை போன்று வேறு தைரியசாலிகள் கிடையாது.
அவருக்கு ஏதோ கெட்ட நேரம் அவருடைய தைரியம் அவரை நிச்சயம் காப்பாற்றும் அவரது நல்ல மனதிற்கு சிங்கம் மாதிரி கூடிய விரைவில் திரும்பி வருவார். அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஆனால் நடிகர் சங்கத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிக்க வாய்ப்பு கிடைத்தால் 2 காட்சிகள் என்றாலும் நடிப்பேன் எனக் கூறினார்.