
ஜம்மு- காஷ்மீரில் அனந்தராஜ் பகுதியில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அந்தத் தாக்குதலில் இந்திய ராணுவம் பயங்கரமாக முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன் பின் பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ராணா சமானுல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ” இந்தியா மேற்கொண்டு எந்த பதற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால் பாகிஸ்தான் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாது.
இதனை உலகிற்கும், இந்திய அரசு மற்றும் ராணுவத்திற்கும் தெளிவுபடுத்தியுள்ளது. அந்தத் தாக்குதலுக்கு நாங்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம். இந்தியா இதன் பின்பும் ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டால், அதற்கு கூடுதலாக பதிலடி கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.