ஐசிசி தரவரிசையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

ஐசிசி இன்று வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த வார அட்டவணைப்படி ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ள நிலையில், இந்திய அணி அந்த இடத்திற்கு முன்னேறி உள்ளது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதன் மூலம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது..

இந்த புதிய பட்டியல் படி 115 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்திலும், 111 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா  இரண்டாவது இடத்திலும், 106 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதன் மூலம் 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி, டெஸ்ட் என 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஏற்கனவே ஒரு நாள் (114 புள்ளி) மற்றும் டி 20 போட்டி 267 புள்ளி) அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தில் இருந்த நிலையில், இப்போது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.